RSS

தமிழ் அறிவு வானொலி | கேட்டு மகிழுங்கள்




வணக்கம் தாய் தமிழ் உறவுகளே | நண்பர்களே | நேயர்களே

இன்றுமுதல் இனிதே ஆரம்பம் | தமிழ் அறிவு வானொலி | கேட்டு மகிழுங்கள்

http://tamilarivuradio.webs.com/ [OR] [அல்லது ]

http://tamilarivuradio.listen2myradio.com/

பணி நிமித்தம் காரணமாகவும் | புதிய தொழில்நுட்பங்கள் இணைப்பதின் காரணமாகவும் வாரநாட்களில் 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையும் | வார இறுதிநாட்களில் 24 மணி நேரமும் வானொலி இயங்கும் என அன்போடு தெரிவித்து கொள்கிறோம்

அன்புடன் - தமிழ் அறிவு வானொலி குழு




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வீண் பழியும் இலவம் பஞ்சும் | அறிவுக்கதைகள்

ஒரு ஊரில் வெட்டுபுலி  என்ற ஒருவன் இருந்தான். அவன் ஒரு முறை தேவையில்லாமல் ஒரு கிராமவாசி மீது பழி சொல்லி பஞ்சாயத்தைக் கூட்டினான்.

பஞ்சாயத்திலும் கிராமவாசிக்குத் தண்டனை கிடைத்தது. பின், வீட்டிற்கு வந்த வெட்டுபுலியின்யின் மனசாட்சி அவனை உறுத்தியது. கிராமவாசி மீது தான் பழி சொன்னதை எண்ணி வருந்தினான். எனவே, தன் பாவத்திற்கு ஏதாவது பிராயச்சித்தம் உண்டா என்று தேடினான்.

என்ன பிராயச்சித்தம் செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. எனவே, அந்த ஊரிலிருந்த ஒரு துறவியிடம் சென்றான். “துறவியாரே! நான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் மீது வீண் பழி சொல்லிவிட்டேன். அது என் மனத்தை உறுத்துகிறது. அந்தப் பழி சொன்ன பாவத்தில் இருந்து தப்பிக்க எனக்கு வழி கூறுங்கள்!” என்று கேட்டான்.
...
துறவி சிறிது யோசித்துவிட்டு, “இன்று இரவு மூன்று கிலோ இலவம் பஞ்சை எடுத்துப் போய் அந்த கிராமவாசியின் வீட்டுக்கு முன்பு பரப்பிப் போட்டுவிட்டு வந்து விடு. நாளை வந்து என்னைப் பார்,” என்று கூறினார்.

வெட்டுபுலியிடம் பஞ்சைக் கொண்டு சென்று கிராமவாசியின் வீட்டின் முன் பரப்பி விட்டான். பின் மறுநாள் சென்று துறவியைப் பார்த்தான். “துறவியாரே! என் பாவம் போய் இருக்குமா இந்நேரம்?” என்று கேட்டான்.

உடனே துறவி, “
வெட்டுபுலி! நீ இப்போது அந்த கிராமவாசியின் வீட்டிற்குச் செல். அவன் வீட்டு முன் நீ நேற்றிரவு பரப்பி வைத்த பஞ்சை மீண்டும் பொறுக்கிக்கொண்டு வா,” என்று கூறினார்.

வெட்டுபுலி மிகுந்த ஆவலுடன் ஓடினான். ஆனால், ஒரு விரல் அளவு பஞ்சு கூட அங்கு இல்லை. எல்லாம் காற்றில் பறந்துபோய் விட்டிருந்தது. அதனைக் கண்ட வெட்டுபுலி திடுக்கிட்டான். மீண்டும் துறவியிடம் ஓடி வந்தான்.

“துறவியாரே! நேற்றிரவு நான் கிராமவாசி வீட்டின் முன்னால் போட்டுவிட்டு வந்த பஞ்சில் ஒரு துளிப் பஞ்சாவது இப்போது அங்கு இல்லை. என்ன செய்வது?” என்று கேட்டான்.

துறவி சிரித்துவிட்டு, “
வெட்டுபுலி! நீ விரித்துப் போட்டுவிட்டு வந்த பஞ்சை இப்போது மீண்டும் எப்படி அள்ள முடியாதோ, அதே போல, நீ ஒருவர் மீது கூறிய பழியையும் அதனால் உனக்கு ஏற்பட்ட பாவத்தையும் மாற்ற முடியாது. திருப்பி வார முடியாத பஞ்சைப் போன்றது தான் உன் பழிச் சொற்களும். அவற்றையும் இனித் திருப்பி வார முடியாது. இறைவனிடும் உன் தவறுக்காக மன்னிப்பு கேள்,” என்று கூறினார்.

வெட்டுபுலிக்கு உண்மை புரிந்தது. அன்று முதல் மற்றவர்கள் மீது பழி சொல்லும் குணத்தையே விட்டுவிட்டான். பிறர் மீது வீண் பழி சுமத்துவதால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தான் வெட்டுபுலி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பார்வை ஒன்றே போதுமே | அறிவு கதைகள்


ஒரு காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது.

அந்த வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத்தோடு  கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு வினவினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்து போனான் அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தெரிந்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி...!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுளை குழப்பிய மன்னார்சாமி | தன்னம்பிக்கை கதைகள்

ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார்.

அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.



இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.

"கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்தச் முனிவர் கூறினார்.

மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.

"பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?'' கடவுள் கேட்டார்.

""தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார், அதான்...'' என்றார் மன்னார்சாமி.

""என்ன வரம் வேண்டும், கேள்...'' என்றார் கடவுள்.

"அதான் கேட்டேனே வரம்... அதை கொடு...'' என்றார் மன்னார்சாமி.

இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்....! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.

என்ன செய்யலாம்......!? - கடவுள் யோசித்தார்.

"பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன்... பெற்றுக் கொள்... போ!''

"அய்...யய்ய....யோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!''

"அதான்...'' என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! - எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்