RSS

தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள்

மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த ஒரு முனிவர் ஒருவர் கிட்ட சொன்னார். ” இவன் ரொம்ப சோம்பேரியா இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்” னு சொன்னார்.


முனிவர் ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான்.

அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.

இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைத்து போனான் .

அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.

தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். அது சுலபமா போய்டும் பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.

பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கதை! நன்றி!

Kasthuri Rengan said...

அருமையான கதை
நன்றி
சகோதரி இனியாவின் வலைச்சர அறிமுகத்தின் மூலம் வந்தேன்

Post a Comment

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்