RSS

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு | பள்ளி செல்லும் குழந்தைகள்


குழந்தைகள் ஒரு வரப்பிரசாதம் மற்றும் விலை மதிக்க முடியாத சொத்து.
உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிப்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்! மணி கணக்கில் உங்கள் பாதுகாப்பின்றி அவள் தனியாக தானாகவே இந்த வெளி உலகத்தில் இருப்பாள். 

பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.
 
பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்பிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே... என்கிற ரீதியில் பேச வேண்டும். 

பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால். குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் - சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உங்களின் குழந்தைகளை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பது உங்களின் கைகளில் தான் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் போட்டிகள் போடும் போது, அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து நீங்களே அவர்களின் மனதில் பொறாமை போன்ற தவறான எண்ணங்கள் தோன்றும்படியான செயல்களை சொல்லிக்கொடுக்காதீர்கள்.
மேலும், பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் மற்ற பழக்க வழக்கங்களை பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிந்து கொள்வதன் மூலம் உங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி உங்கள் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியருடைய தொலைபேசி எண்ணை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளி செல்லும் போது அவர்களின் பையில் உங்கள் வீட்டின் விலாசம், தொலைபேசி எண் உள்ள அட்டையை மறக்காமல் வைக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உங்களின் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் உங்களிடம் இருக்கவே இருக்காது.

தொகுப்பு : பாபு நடேசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

1 comments:

Unknown said...

வாழ்த்துக்கள்

Post a Comment

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்