RSS

கற்பித்தல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது | தமிழ் அறிவு கதைகள்


ஒரு ஊர்ல விஷ்வா-ன்னு ஒருத்தர் இருந்தார், அவர் தன்  ஊரில் உள்ள பள்ளியில் பயின்று , மேற்படிப்புகளை முடித்து \ஆசிரியர் வேலை வாங்கியதும் அவருடைய பழைய பள்ளி ஆசிரியரை காண செல்லுகிறார். அவர் அந்த பள்ளியை அடைத்ததும் அய்யா வணக்கம், என்னை தெரிகிறதா? நான் உங்ககிட்ட தான் படிச்சேன் அய்யா என சொல்கிறார்.

Tamil Arivu Kadhaikal
ஆசிரியர், ஞாபகம்  இல்லையப்பா....!  நீ எந்த வருடத்தில் படித்தாய்? எந்த வகுப்பு? என கேட்க.... விஷ்வா சொல்கிறார் நான் இந்த வருடத்தில் படித்தேன் அய்யான்னு சொல்லிட்டு, நீங்க தான் சார் எனக்கு குரு , நீங்க தான் எனக்கு வழிகாட்டி, நீங்கதான் என் முன்மாதிரி ன்னு அடிகி க்கிட்டே போனார் . உங்களை மாதிரியே நன்கு படித்து நல்ல ஆசிரியரா வரணும்ன்னு அயராது படித்து இப்போது ஆசிரியரும் ஆகிவிட்டேன் அய்யா-ன்னு சொன்னார் விஷ்வா.

ஆசிரியருக்கு மிக பெரிய சந்தோசம், நாம கிட்ட படிச்ச பையன் நம்மளை போலவே  ஆசிரியரா வந்து நிக்கிறான்னு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

எப்படிப்பா... எப்படி என்னை முன்மாதிரியா  எடுத்துக்கிட்டு நீ ஆசிரியரானே... அப்படி என்ன விஷயம் என்கிட்டே பிடிச்சுது-ன்னு கேட்டார்.

விஷ்வா வகுப்பில் நடந்த ஒரு சம்பவத்தை கூறினான்...

அய்யா...! உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல.... நான் உங்களுக்கு விரிவா சொல்லுறேன்யா....!

உங்க வகுப்புல தான் நான் படிச்சேன், நான் ஒரு ஏழை மாணவன், எந்த பொருளை பார்த்தாலும் எனக்கு ஆசை வரும், ஒருநாள் செந்தில் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்தை கட்டி இருந்தான், அதை பார்த்ததும் எப்படியாவது நான் அதை எடுத்துறணும்-ன்னு பேராசைப்பட்டேன், அந்த கடிகாரத்தை வாங்கும் அளவுக்கு என் குடும்பத்துல வசதி கிடையாது.

மதிய உணவு இடைவேளையில் செந்தில்  கடிகாரத்தை கழட்டி வச்சுட்டு கை கழுவ போய்ட்டான், அந்த நேரம் பார்த்து நான் அதை எடுத்து என் கால் சட்டை பையில் போட்டுகிட்டேன்..... செந்தில் அழுதுகிட்டே உங்ககிட்ட புகார் சொன்னான்..... 

தமிழ் அறிவு கதைகள்
நீங்க அதுக்கு எந்த கோபமும் படமா... யாரையும் சந்தேக படாம.... எடுத்தவங்க கொடுத்துருன்னு சொன்னீங்க, ஆனா யாருமே கொண்டுவந்து வைக்கல...... 


கொஞ்ச நேரம் கழித்து நீங்க எல்லோரையும் வரிசையா நிற்க சொன்னீங்க... எல்லோரும் வரிசையில நின்னோம்.

எல்லாரோட கண்களையும் கட்டுனீங்க, அப்புறம் பொறுமையா ஒவொருத்தருடைய கால் சட்டைப்பையிலும் கைய விட்டு பரிசோதனை பண்ணுனீங்க,. என்னோட சட்டைப்பையில் கடிகாரம் இருந்தது... எல்லோரும் அப்போது கண்ணை கட்டிதான் இருந்தாங்க, எந்த சத்தமும் இல்லாம செந்தில்-கிட்ட போயி அந்த கடிகாரத்தை கொடுத்துடீங்க...

எங்க இருந்து எடுத்தீங்கன்னு சொல்லல, எப்படி எடுத்தீங்கன்னு சொல்லல..... .
எங்கிட்டையும் எதுவும் கேட்கவும்  இல்லை....., ஏன்டா இப்படி செய்தேன்னு என்னை எல்லோர் முன்னாடியும் அவமானமும் படுத்தவில்லை, எனக்கு திருட்டு பட்டமும் கட்டவில்லை....

என் மானத்தையும் காப்பாத்துனீங்க...! என்னோட சுய மரியாதையும் காப்பாத்துனீங்க...! அய்யா...!

அன்றைக்கு முடிவு பண்ணுனேன் அய்யா, கற்பித்தல் ஏவோல பெரிய விஷயம்ன்னு....!. அப்போது தான்  முடிவு பண்ணுனேன் அய்யா, படிச்சா ஆசிரியரா தான் படிக்கனும்-ன்னு....! கற்பித்தலை தலையாய கடமைன்னு எடுத்துக்கனும்-ன்னு  முடிவு பண்ணிட்டு உங்களை  என் முன்மாதிரி எடுத்துக்கிட்டு படிச்சேன் அய்யா. உங்கலமாதிரி நல்ல ஆசிரியரா நான் வாழ்ந்து காண்பிக்கணுன்னு ஆசை அய்யா ன்னு சொன்ன விஷ்வா கண்களில் கண்ணீர் பெருகியது, செய்தது தவறிலிருந்து பாடம் கற்பித்து கொண்ட ஆனந்தம் அதுதான்.

ஆசிரியருக்கு ரொம்ப சந்தோசம்,  அருமைடா.... அருமை ரொம்ப பெருமையை இருக்கு, நீ இன்னும் பெரிய ஆளா வருவேன்னு வாழ்த்துனாரு....

விஷ்வா ஆசிரியரிடம் கேட்டான், அய்யா இப்போதாவது சொல்லுங்க அய்யா, என்னோட முகம் உங்களுக்கு ஞாபகம் வருதான்னு..?

அப்பவும் அந்த ஆசிரியர் , இல்லையேப்பா எனக்கு ஞாபகம் வரல ன்னு - சொன்னார் 

என்ன அய்யா இப்படி சொல்லிடீங்க...!? ஏவோல பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாத்துனீங்க, அப்படியும் என் முகம் மறந்து போனதா...?

இல்லப்பா எப்படி எனக்கு ஞாபகம் வரும்ன்னு நீ நினைக்கிறே....! அன்றைய தினம் உங்களையெல்லாம் பரிசோதனை செய்யும் போது நானும் என் கண்களை  கட்டிக் கொண்டு அல்லவே பரிசோதனை செய்தேன்.....! அப்புறம் எப்படி உன் முகம் எனக்கு ஞாபகம் வரும்...?  சொல்லு.....?

ஏவோல பெரிய விஷயம் அமைதியா முடிச்சிருக்கார் பாருங்க... அவரால் அவனுக்கு திருட்டு பட்டம் கட்டியிருக்க முடியும், தண்டித்திருக்க முடியும், ஆனா அவரு எதையுமே  செய்யல....!

அந்த மாணவனையும் அடையாளம் கண்டிருக்க முடியும், அதையும்  செய்யவில்லை.

ஏவோலை பொறுமையா இந்த விஷயத்தை கையாண்டுருக்கார் பாருங்களேன்...! எங்க  அந்த மாணவனின் முகத்தை பார்த்துட்டா அந்த திருட்டு  ஞாபகம் வந்துருமோன்னு, தன் கண்களையும் கட்டிக்கொண்டு கண்டு பிடித்தார் அல்லவா..... ஒரு விஷயத்தை அவர் நாசூக்கா சொல்லுறார்.... தண்டித்தலில் இல்ல, கற்பித்தலிலும், முன்மாதிரியாக இருப்பதிலும் தான் நல்ல நிகழ்வே நடக்கும் சொல்லறார்.  



என்னா  ஒரு அமைதியா அந்த மாணவனை  ஆசிரியர் ஆக்கி இருக்கிறார் பார்த்தீர்களா..! இதே தான் நம்ம வாழ்க்கையிலும், ஒருத்தர தண்டித்தால் தான் திருந்துவாங்கன்னு நினைச்சா கண்டிப்பா மாறமாட்டாங்க, அதுக்கு பதிலா நாம முன்மாதிரியா இருந்தா.....!? நம்மல சுத்தி இருக்ககிறவங்களும் நல்லவர்களாக மாறுவார்கள்....! 

வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது இல்லை. கற்பித்தல், கற்பிப்பது என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விசயம். ஓர் ஆசிரியர் இதயபூர்மாகப் படிப்பித்தால்தான் அது மாணவர்களைச் சென்றடையும். உள்ளத்துடன் படிப்பித்தால்தான் மாணவர் களால் உள்வாங்க முடியும். ஆகவே கண்டித்துக் கற்பிக்கச் செய்வதெல்லாம் உரிய பலனைத் தராது என்ற உன்னத கருத்தினையும் முன்வைக்கிறார் இங்கே.

உண்மையிலேயே கற்பித்தல் என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் ஈடேற்றிவிட முடியாதுதான். மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வீட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பண்பு உள்ளவர்களாகத் திகழ்வதெல்லாம் ஆசிரியர்கள் கைகளில்தானே உள்ளது? அதை தான் அமைதியாக முடித்திருக்கிறார் அந்த ஆசிரியர்.

தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார் என்பதனை மனதில் கொள்வோம். 

இன்றைய சிறுவர்களே நாளையத் தலைவர்கள். 

இதைத்தான் ந.வீ. செயராமன் அவர்கள் தனது புதுக்கவிதையில் இவ்வாறு பாடுகிறார்.

‘ஏடுதூக்கிப் பள்ளியில்

இன்றுபயிலும் சிறுவரே

நாடுகாக்கும் தலைவராய்

நாளைவிளங்கப் போகிறார்’

எதிர்காலத்தின் தூண்களாகத் திகழும் மாணவர்களுக்குச் சீரிய சிந்தனையை விதைத்து, ஊக்க உரமிட்டு வளர்க்க இந்த ஆசிரியர்களே காரணம். 

முடிந்தவரை ஊருக்கு செல்லும் போதெல்லாம் உங்கள் ஆசிரியரை சந்தியுங்கள்....

முன்மாதிரியாய் நாமும் வாழ்ந்துதான் பார்ப்போமே  | கற்பித்தலில் களங்கமற்று கற்றுக்கொள்வோம்.


கதை : கேட்டதில் எழுதியது
படங்கள் : கூகிள்
ஆதாரம் : பாபு நடேசன் | படித்ததில் பிடித்தது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எதிர்பாரத விஷயங்களை எதிர்கொள் | தமிழ் அறிவு கதைகள் | பாபு நடேசன்

​​ஒரு காட்டுக்குள்ள இரண்டு அணில்கள் நண்பர்களாக வாழ்ந்து  வந்துச்சாம், ஒன்னு பேரு புத்தி, இன்னொன்னு பேரு மத்தி, புத்தி எப்போதும் கடவுள் பக்தியோட இருப்பானாம், மத்தி அதுக்கு அப்படியே எதிர்மறையான எண்ணம் உள்ளவன், அதாங்க கடவுள் நம்பிக்கை இல்லாதவன்.

Tamil Arivu kadhakal

எப்போதும் புத்தி கடவுளுக்கு நன்றி சொல்லிகிட்டே இருப்பான், எதாவது நன்மை நடத்​தா​லும் தீமை நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே-ன்னு  கடவுளுக்கு நன்றி சொல்வானாம்,

​எதோ ஒரு நன்மை நமக்கு இருக்குன்னு  சொல்லிட்டு தனக்கு தானே சமாதானம் செய்துகொண்டு போய்விடுவானாம்,
நம்மையும் மீறி ஏதோன்னு நடக்குத்துன்னு புத்தி எப்போ​தும் நம்புவான்​, ​அதை பார்த்து மத்தி கேலி பண்ணி  ஏளனமாய் சிரிப்பானாம். 

உன்னை மீறி வாழ்க்கையில  என்னடா ​நடக்கப்போவுது, நீ என்ன நினைக்கிறியோ அதுதான் வாழக்கையி​லும் ​நடக்கும்-ன்னு  மத்தி சொல்லிகிட்டே இருப்பானாம்.  

Tamil Arivu kadhakal

ஒரு நாள் ரெண்டுபேரும் ஒரு அழகான காட்டுக்குள்ள பழங்களை பறித்து  தின்ன போனார்களாம், இங்கேயும் அங்கேயும் ஓடியாடி அந்த மரத்துல விளையாடி கொண்டிருந்தார்களாம், எதிர்பாராத விதமா புத்தி கீழே விழுந்துவிட்டான், முதுகில் பலத்த அடி, சின்னதா ஒரு காய​மும் கூட, வலி தாங்காம முதுகுல தேய்ச்சுகிட்டு, எதோ ஒரு நல்லதுக்கு தான் நாம கீழே விழுந்துட்டோம், நல்லவேளை நமக்கு பெருசா எதுவும் ​அடி படலை... எல்லாம் நமைக்கே-ன்னு சொல்லிட்டு அடிபட்ட இடத்துல தேய்த்து கொண்டு-​டிருந்தான்​, நன்றி கடவுளே தலைக்கு வந்தது தலை பாகையோட போச்சுன்னு சொல்லிட்டு மேல பார்த்தானாம்......

புத்தி  விழுந்ததை பார்த்து மத்தி  ​கெக்கே.... கெக்கே ன்னு ​சிரித்து கொண்டு ஏளனமாய் கேலி செய்தானாம் , நீ ஒழுங்கா மரத்தை பிடிக்காம கவனக்குறைவா விழுந்ததுக்கு ஏன்டா கடவுளுக்கு நன்றி சொல்றே.... னுக்கு கேலி செய்தானாம்......

Tamil Arivu kadhakal


டேய் மத்தி நான் கீழே விழுந்தவுடன் செத்து போய் இருக்கலாம், ஆனா சின்னதா அடிபட்டத்தோட தப்பிச்சுகிட்டேன், இதிலிருந்து நம்மள சுத்தி எது நடக்குதோ எல்லாம் நன்மைக்கே​,​ நம்மளையும் மீறி ஏதோ நம்மளை இயக்குதுன்னு நான் முழுமையா நம்புறேன்.... இதைவிட சிறந்த உதாரணம் நான் உனக்கு காட்டமுடியாதுன்னு சொல்லிட்டு மத்தியை மேல நிமிந்து பார்க்குது..... அவோலோதான்.... ஒரு வினாடி தலையே சுத்திருச்சு.....
மத்தி அணிலோட பக்கத்துல ஆவோலை பெரிய பாம்பு வாயை ஆ...ன்னு பிடிக்க ஆயத்தமா இருக்கு... டேய் மத்தி  மத்தி  ​கிழே வாடா ன்னு ​கத்துறதுக்குள்ள லபக்குன்னு அந்த பாம்பு மத்தியை முழுங்கிடுச்சு....... ஒரு நிமிடத்துக்குள்ள எல்லாம் மாயமாய் நடந்து முடிந்தது,




அதை பார்த்​த புத்திக்கு​ ​கால் எல்லாம் வெட வெட-ன்னு ஆட ஆரம்பிச்சுடுது..... என் நண்பன் என் கண் முன்னாடி இப்படி போய்ட்டேனே....ன்னு பயங்கரமா அழுக ஆரம்பிச்து புத்தி.... இவோல பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி ​சொன்னான்​.

நம்மை  சுற்றி நடக்குற எல்லா இன்ப துன்பங்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும், எல்லாம் நமைக்கே  சொல்லிட்டு மத்தி​​யை நினைத்து சோகத்துடன் காட்டுக்குள் சென்று விட்டது.

இதுபோல தான் நம்ம வாழக்கையும், திட்டமிடல் எப்போதும் இருக்கணும், அதே போல ரொம்ப கவனமாகவும் இருக்கணும், அதையும் மீறி ஏதோ  ஒன்னு நம்மளை இயக்குது, எப்போவும் முன்னெச்செரிக்கையா இருக்கணும்... எதிர்பாராத விஷயங்களை கண்டிப்பா நாம எதிர்கொண்டுதான் ஆகணும்.

இப்படி நடந்து போச்சேன்னு உட்கார்ந்து வருத்தபடுவதை விட தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுன்னு எல்லாம் நன்மைக்கென்னு நமபிக்கையோட நகர்தல் நலம்.



எதிர்பாரத விஷயங்களை எதிர்கொண்டு வாழ்ந்துதான் பார்ப்போமே......

வளையும் தன்மையுள்ள ஒரு மரம் புயலில் சிக்கினாலும் அதற்கு ஒன்றும் ஆகாது. அதேபோல், உங்களை மீறி சில மாற்றங்கள் நடக்கும்போது உங்களாலும் அதற்கு “வளைந்து” கொடுக்க கற்றுக்கொள்ள முடியும்.  

எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே கெட்டதாக இருக்கும் என்று சொல்லமுடியாது. 

நாம் நினைக்கும் விதத்தில்தான் நம் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆசைப்படுவோம். ஆனால், அப்படி நடக்கவே நடக்காது.

“மன உறுதியோடு இருக்குறது நம்ம கையிலதான் இருக்கு. இப்போ இருக்குற சூழ்நிலைமையில என்ன நல்ல விஷயங்கள் இருக்குதுனு பாருங்க”

கதை         :  கேட்டதில் எழுதியது 
படங்கள் :  கூகிள் 
ஆதாரம் :  பாபு நடேசன் | படித்ததில் பிடித்தது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்

தாயை போல கருணையும்
தந்தை போல அறிவுரையும் 


தவறுகளை திருத்தியதும்
ஏணியாய் இருந்து என்னை ஏற்றியதும்
அறிவு பசியை ஆற்றியதும்
நல்லது கெட்டது அறியும் அறிவு தந்ததும்
புத்தனின் ஞானமும் சித்தனின் அனுபவமும்
சொல்லி கொடுத்த தெய்வமும்
சிறு சிறு தவறுகளை திருத்தியும்
உலக அறிவையும் உணர்த்தியும்
என்னையும் பலரையும் மேலே உயர்த்தியும்
எங்கள் திறமைகளை புரியவைத்தும்
தோழன் போல தோளில் தட்டிக்கொடுத்தும்
முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றும்
பல சேவை செய்த உங்கள் சேவைக்கு
நன்றி சொல்கிறேன் என் பாசமிக்க ஆசிரியர்களே
உங்கள் ஆசிரியர் பயணம் என்றும்
இனிமையாய் நீண்டு தொடரவும்
நீங்கள் பல்லாண்டுகள் வாழவும்
என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - நெய்வேலி வடக்கு (திரு. சி. சக்கரை,
திரு. எபனேசர் (ஓட்டபிடாரம்), திருமதி/ செல்வி புவனேஸ்வரி (பட்டுக்கோட்டை), நல்ல சத்துணவு வழங்கிய ஆசிரியர் திரு. ப. மணிராசு.


பின்லே மேல்நிலை பள்ளி - மன்னார்குடி (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்).

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - ஆலங்குடி - (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்)


ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பட்டுக்கோட்டை (பேராசிரியர்கள் & பேராசிரியைகள்)


எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி - கரூர் - (பேராசிரியர்கள் &

பேராசிரியைகள்)


மற்றும் எனக்கு படிப்புக்கு உதவிய நண்பர்கள் & சில நல்ல விஷயங்களை கற்று கொடுத்த நல்ல நண்பர்கள் (இவர்களும் ஒரு வகையில் ஆசிரியர்களே)

என்றும் உங்களை மறவா
பாபு நடேசன்
நெய்வேலி வடபாதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சேவலும் நரியும் | தந்திர சேவல் | தமிழ் அறிவு கதைகள்

காட்டில் உள்ள மரத்தின் மேல் சேவல் ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு சேவல் ஆனதால் கண்டதை எல்லாம் தின்று உடல் கொழுத்துத் திரிந்தது; நல்ல பலசாலியாகவும் இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று கத்தினால் காடே அதிரும்.




அது இருந்த மரத்தின் வழியாக தினந்தோறும் நரி ஒன்று செல்லும். போகும் போது வரும்போது ""எப்படியாவது இந்தக் கொழுத்த சேவலைப் பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று எண்ணியவாறு ஆசையுடன் சேவலைப் பார்க்கும். சேவலுக்கு நரியின் பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.


சேவல் அந்த மரத்தை விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று நரி.
இந்தச் சேவலைத் தந்திரத்தால்தான் வளைத்துப் போட்டு, தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் நரி அவ்வழியே வரும்போது அது மரத்தின் கீழ் அமர்ந்து சேவலிடம் பேச ஆரம்பித்தது.
 

""அழகிய சேவலே! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய சிங்கராஜா ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் பகை கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.


""எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை காட்டோர அருவிப் பகுதியில் நிலா வெளிச்சத்தில் ஊலல்லல்லா பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக் கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் ஞாபகத்துக்கு வந்தாய். வா, நாமிருவரும் சேர்ந்து அருவிக் கரைக்குப் போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்,'' என்றது.


நரி பேசப் பேச சேவல் அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த கிளைக்குச் சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.



அதைப் பார்த்த நரிக்கு எரிச்சலாக இருந்தது.
""நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் மரக்கிளைக்கு மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே,'' என்றது.

 

"நரியாரே, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றது.

""அதை விட முக்கியமான சமாசாரமா? அது என்ன.....?'' என்றது நரி.

""வெகு தூரத்தில் இரண்டு உருவங்கள் ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது சேவல்.

""அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது நரி.
""இரண்டும் நாக்கை தொங்க விட்டிருக்கின்றன. அதன் கண்கள் பளபளவென ஜொலிக்கின்றன. அங்கும், இங்கும் பார்த்து எதையோ மூக்கால் முகர்கின்றன. அதற்கு நான்கு கால்கள் இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன. ஒருவேளை அவை ஓநாய்களோ,'' என்றது சேவல்.


""நாசமாப் போக, அவை ஓநாய்களில்லை. வேட்டை நாய்கள். பார்த்தால் கடித்துக் குதறி விடும்,'' என்று கூறியவாறு ஓட்டமெடுத்தது நரி.
நரி ஓடுவதை பார்த்து சேவல் சிரித்தது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு | பள்ளி செல்லும் குழந்தைகள்


குழந்தைகள் ஒரு வரப்பிரசாதம் மற்றும் விலை மதிக்க முடியாத சொத்து.
உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிப்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்! மணி கணக்கில் உங்கள் பாதுகாப்பின்றி அவள் தனியாக தானாகவே இந்த வெளி உலகத்தில் இருப்பாள். 

பள்ளியில் தான் சந்திக்கும் அனைவரும் தன்னை போலவே பயத்துடனும் நடுக்கத்துடனும் இருப்பார்கள் என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அங்கு புதிய நண்பர்களை பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பிக்கையளியுங்கள்.
 
பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்பிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே... என்கிற ரீதியில் பேச வேண்டும். 

பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால். குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

பள்ளியை பற்றி குழந்தையிடம் நேர்மறையான முறையில் எடுத்து கூறுங்கள் - சிந்தித்தல் மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை பற்றி அவர்களை பழக்கப்படுத்துங்கள், பள்ளியை பற்றி கேள்வி அல்லது சந்தேகங்களை உங்களிடம் கேட்க ஊக்குவியுங்கள்.
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது தங்களை தவிர வேறு நபர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும், முகம் தெரியாதவர்கள் யாரேனும் அழைத்தால் அவர்களுடன் போகக்கூடாது என்பதை பற்றியும் சொல்லிக்கொடுத்து, குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உங்களின் குழந்தைகளை நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பது உங்களின் கைகளில் தான் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் பள்ளிகளில் மற்ற மாணவர்களுடன் போட்டிகள் போடும் போது, அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து நீங்களே அவர்களின் மனதில் பொறாமை போன்ற தவறான எண்ணங்கள் தோன்றும்படியான செயல்களை சொல்லிக்கொடுக்காதீர்கள்.
மேலும், பள்ளிகளில் தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் மற்ற பழக்க வழக்கங்களை பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிந்து கொள்வதன் மூலம் உங்களின் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க முடியும். அதுமட்டுமின்றி உங்கள் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியருடைய தொலைபேசி எண்ணை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பள்ளி செல்லும் போது அவர்களின் பையில் உங்கள் வீட்டின் விலாசம், தொலைபேசி எண் உள்ள அட்டையை மறக்காமல் வைக்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உங்களின் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் உங்களிடம் இருக்கவே இருக்காது.

தொகுப்பு : பாபு நடேசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எல்லா உயிர்களுக்கும் உதவி செய் | தமிழ் அறிவு கதைகள்

ஒரு நாட்டு  ராஜாவிடம் முத்தன்  வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன்  தான் அந்த ராஜாவுக்கு தினமும்  உணவு கொண்டு கொடுப்பான்.  ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். 

ஒரு நாள்  முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள்  ஏதோ  துண்டு தூண்களாக  சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று  ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய  சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான். 




அவன் குதிரையில்  கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள்  சாரை சாரையாக போவதை பார்த்தான்,  எறும்பின்  தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு  உதவுவேன் என்று கூறியது.


அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.

அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.


அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.

அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. 

அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான்.

போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால்   சிறையில் தள்ளிவிடுவார்கள்.  

போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை  எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.

குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன்.

இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு   விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க  வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான்  என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.

இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும்.

அவன்  இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான்  அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.

எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். 

‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’ 

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை
தமிழாக்கம்: ஆல்பர்ட்
” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது.

குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.


தொகுப்பும் மீள்பதிவும்: பாபு நடேசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காகமும் கார்த்தியும் | நேரம் தவறாமை | தமிழ் அறிவு கதைகள்

சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.

காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.



இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.

மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.

ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.



நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்