RSS

எளியவர்கள் ஒற்றுமையின்றி இருப்பது வலியவர்களுக்கு நன்மையாகும்

தவளையும் சுண்டெலியும்

ஒரு காட்டில் தவளையும் சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. தவளை வாழ்ந்து வந்த குளத்தில் கோடைக் காலத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது.எனவே எலி அதற்கு உதவி செய்ய நினைத்தது. அங்குமிங்கும் தேடி ஒரு குளத்தைக் கண்டறிந்தது. குளத்தினருகில் சென்ற போது, குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் சண்டை வந்தது. 
 
எலி தன் இனத்தவரை ஆதரவிற்குக் கூப்பிட்டது. தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயின. வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் இதைக் கண்டன. சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள் , தவளைகள் மீது பாய்ந்து தமக்கு இரையாக்கிக் கொண்டன.

நீதி: எளியவர்கள் ஒற்றுமையின்றி இருப்பது வலியவர்களுக்கு நன்மையாகும்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.

ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல்,   முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.

தேனீக்கள் மலருக்கு மலர் சென்று தேன் சேகரிப்பதை சில ஈக்கள் பார்த்தன. எதற்கு இத்தனை கஷ்டம். ஒரு வீட்டில் அலமாரியில் தேன் பாட்டில் வைத்து இருந்தார்கள். அது சரியும் நிலையில் இருந்ததை  . ஈக்கள் பார்த்து விட்டன . காத்திருந்து, அது சரிந்ததும் மாற்றி மாற்றிக் குடிக்கலாம் என்று நினைத்தது.

அவைகள் எதிர்பார்த்தபடியே தேன் பாட்டில் சரிந்து  தரையெல்லாம் தேன்.  ஈக்கள் உற்சாகத்துடன் மொய்த்துத் தேனைத் தத்தம் சின்ன நாக்குகளால் பருகின, திருப்தியாகத் தேன் குடித்ததும் பறந்து போக முயற்சித்த போது இறக்கையெல்லாம் தேன் ஒட்டிக்கொண்டு நகர முடியாமல் தேனிலேயே மாட்டி இறந்துவிட்டன.

நீதி : இலவச சந்தோஷம் உயிரை வாங்கிவிடும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது

ஒருவன் அதிகாரி , ‘நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது’ என்பதில் குறிக்கோளாக இருந்தார்.

அதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன்  முக சவரம் செய்துகொண்டே குளிப்பார். கழிவறையில் பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்ச்சி பண்ணிக்கொண்டே, வானொலியில் பக்திப் பாடல்கள் கேட்பார்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடத்தையும்  விரயமாக்காமல்  பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது.

மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கை கழுவ  வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது செய்திதாளில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. கண்ணின் விழி கரண்டியோடு வந்துவிட்டது.

இப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருகிறார், பிடித்து மறுபடி
நீரில் விட்டு விடுகிறார்.

நீதி : *நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது*.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன்

ஒரு ஊரு இருந்துச்சு அந்த ஊருல எல்லோரும் உழவர்கள்தான் அது வாணம் பாத்த பூமி அதாங்க மழைபெஞ்சாத்தான் பயிர்செய்யமுடியும் அந்த வருஷம் எல்லோரும் வயல்ல ஏர் ஓட்டி பயிர்செய்ய தயார்செஞ்சு வைச்சுருந்தாங்க ஆனா பாருங்க மழையே வரலை அதனால யாரும் பயிர்செய்ய முடியல அடுத்த வருஷமும் அதேபோல ஏர்ஓட்டி தயாரா இருந்தும் மழைவரல இப்படியே 16 வருஷம் ஆச்சுங்க மழைமட்டும் பெய்யவே இல்லை அதனால இனிமே எங்க மழைவரபோகுதுன்னு யாரும் ஏர்ஓட்டறது இல்லைங்க கடும் பஞ்சம் வேற வந்துருச்சு ஆனாலும் ஒருத்தருமட்டும் வருஷா வருஷம் தவறாம ஏர்ஓட்டுவாரு இந்த 16வது வருஷமும் இவரு ஏர் ஓட்றத பார்த்த இன்னொருத்தர் எந்த நம்பிக்கைல ஏர் ஓட்டறிங்கன்னு கேட்டாராம்

அதுக்கு அவரு சொன்னாறாம் மழைவருமோ வராதோ எனக்கு தெரியாது ஆனா திடீர்னு வந்துச்சுன்னா 16 வருஷமா ஏர்ஓட்றத நிறுத்தின எனக்கு ஏர் ஓட்றது எப்படின்னே மறந்திடும் அப்போ எப்படி என்னால ஏர் ஓட்ட முடியும்னு கேட்டாறாம்

இது மழைக்கடவுளான வருனபகவான் காதுல விழுந்துச்சாம்

ஏன்னா ஒருவேலைய தொடர்ந்து செய்யாம இருந்தா அது மறந்துரும்னு அந்த உழவன் சொன்னது. இவரோட வேலை மழைபெய்ய வைக்கறதுதனே அதுக்குதான் மக்கள் எல்லோரும் நம்மளை கும்பிடுறாங்க இல்லையின்னா நம்மள மதிக்கவே மாட்டாங்களேன்னு பயந்துபோய் அப்ப மழைய பெய்ய வச்சாறாம் அதனால அந்த ஊரு பஞ்சம் நீங்கி செழிப்பா ஆயிருச்சாம்.

இந்த நிகழ்ச்சிக்கப்புறம் தான் உழவன் சொல்லால் ஒழிந்தது வழக்குன்னு ஒரு பழமொழியும் வந்துச்சாம்

நாம உழவர்களப்பத்தி அவங்க சேத்துல கால்வைக்கலன்ன நாம சோத்துல கைவைக்கமுடியாதுன்னு நல்லா பெருமையா பேசுவோம் ஆனா அவங்களுக்கு எதுவுமே செய்யமாட்டோம் உழவர் திருநாள் அன்றைக்காவது அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

நான் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது எனக்கு படிக்கறதெல்லாம் மறந்துடுது சார் அப்படின்னு சொல்ற பசங்களுக்கு இந்த கதையத்தான் சொல்லி ஞாபகமறதிங்கறது எல்லோருக்கும் உண்டு நாமதான் படிச்சதெல்லாம் திரும்பவும் அப்பப்போ படிக்கணும் இல்லன்னா கடவுளேயானாலும் மறந்துறுவாங்க நீ போய் நல்லா படி மறக்காதுன்னு சொல்லிருவேன் நீங்களும் உங்க வீட்ல இருக்குற சுட்டிகளுக்கு இந்த கதைய சொல்லி படிக்க சொல்லுங்க நண்பர்களே.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்

ஒரு மொட்டை தலையனைக் கொசு கடித்துவிட்டது. கோபத்தில் அதைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் தலையில் பளேர் என்று அடித்துக்கொண்டான். கொசு சுலபமாகப் பறந்து சென்று சற்று தூரத்திலிருந்து சின்னதாகச் சிரித்தது. “ஒரு சிறிய கொசுக்கடியை உன்னால் தாங்க முடியவில்லையே! இதற்காக உன்னையே வருத்திக்கொள்கிறாயே, தலை வலிக்கிறதா” என்றது.

அதற்கு அவன் “ என்னை நானே அடித்துக்கொண்டாலும், அதற்காக என்னை நானே மன்னிக்கவும் முடியும். ஆனால் என் ரத்தத்தை ஓசியாகக் குடிக்கும் உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன். என்னிடம் மாட்டமலா போய்விடுவாய் ” என்றான்

நீதி:*பழிவாங்கல் இருவரையும் பாதிக்கும்*.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் - வக்கீல்கள் மட்டுமே.

ஒரு குடும்பதலைவர் இறந்தபோது கண்ணீர் விட்டழுதனர் உறவினர். அனைவரும் அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு வழக்கு தொடர்ந்தார்கள் பல வருஷங்கள் இழுத்தடித்த பின், அவர்களில் ஒருவருக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று. வென்றவர் தன் வக்கீலை அழைத்து, “சொத்தை மதிப்பிடுங்கள்” என்றார்.

வக்கீல் தனது கடைசி தவணையை வாங்கிக்கொண்டு, “மதிப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை” என்றார்

பின், வழக்கு தொடர்ந்ததால் எனக்கு என்ன பயன்?” என்றார் வென்றவர்.

அய்யா! நீங்கள் என் மிக முக்கியமான கட்சிக்காரர். ஆனால், உங்களுக்கு வழக்கு போட்டு சொத்து பெறுவதில், எந்த லாபமுமில்லை என்கிற ஆதார உண்மை கூடத் தெரியவில்லையே! என்று ஆச்சரியப்ப்டுகிறேன்” என்றார்.

நீதி:* சொத்து வழக்குகளில் ஜெயிப்பவர்கள் இரு கட்சி வக்கீல்கள் மட்டுமே.*

தயவு செய்து நாமக்கல்லில் ஒரு வக்கீல் இருக்கிறார் மோ****ஸ் என்று - அவரிடம் எதுக்கும் செல்லாதீர்கள் - வழக்கில் வெற்றி கண்டாலும் உங்கள் கை காசு கொடுத்து வரவேண்டி இருக்கும்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

கெடுவார், கேடு நினைப்பார்!

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.

எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.

ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.

நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது

ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது

சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது

தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து

ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.

ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .

தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்