Pages - Menu

Thursday, November 14, 2019

கற்பித்தல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது | தமிழ் அறிவு கதைகள்


ஒரு ஊர்ல விஷ்வா-ன்னு ஒருத்தர் இருந்தார், அவர் தன்  ஊரில் உள்ள பள்ளியில் பயின்று , மேற்படிப்புகளை முடித்து \ஆசிரியர் வேலை வாங்கியதும் அவருடைய பழைய பள்ளி ஆசிரியரை காண செல்லுகிறார். அவர் அந்த பள்ளியை அடைத்ததும் அய்யா வணக்கம், என்னை தெரிகிறதா? நான் உங்ககிட்ட தான் படிச்சேன் அய்யா என சொல்கிறார்.

Tamil Arivu Kadhaikal
ஆசிரியர், ஞாபகம்  இல்லையப்பா....!  நீ எந்த வருடத்தில் படித்தாய்? எந்த வகுப்பு? என கேட்க.... விஷ்வா சொல்கிறார் நான் இந்த வருடத்தில் படித்தேன் அய்யான்னு சொல்லிட்டு, நீங்க தான் சார் எனக்கு குரு , நீங்க தான் எனக்கு வழிகாட்டி, நீங்கதான் என் முன்மாதிரி ன்னு அடிகி க்கிட்டே போனார் . உங்களை மாதிரியே நன்கு படித்து நல்ல ஆசிரியரா வரணும்ன்னு அயராது படித்து இப்போது ஆசிரியரும் ஆகிவிட்டேன் அய்யா-ன்னு சொன்னார் விஷ்வா.

ஆசிரியருக்கு மிக பெரிய சந்தோசம், நாம கிட்ட படிச்ச பையன் நம்மளை போலவே  ஆசிரியரா வந்து நிக்கிறான்னு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்.

எப்படிப்பா... எப்படி என்னை முன்மாதிரியா  எடுத்துக்கிட்டு நீ ஆசிரியரானே... அப்படி என்ன விஷயம் என்கிட்டே பிடிச்சுது-ன்னு கேட்டார்.

விஷ்வா வகுப்பில் நடந்த ஒரு சம்பவத்தை கூறினான்...

அய்யா...! உங்களுக்கு ஞாபகம் இருக்கா இல்லையான்னு தெரியல.... நான் உங்களுக்கு விரிவா சொல்லுறேன்யா....!

உங்க வகுப்புல தான் நான் படிச்சேன், நான் ஒரு ஏழை மாணவன், எந்த பொருளை பார்த்தாலும் எனக்கு ஆசை வரும், ஒருநாள் செந்தில் ஒரு விலையுயர்ந்த கடிகாரத்தை கட்டி இருந்தான், அதை பார்த்ததும் எப்படியாவது நான் அதை எடுத்துறணும்-ன்னு பேராசைப்பட்டேன், அந்த கடிகாரத்தை வாங்கும் அளவுக்கு என் குடும்பத்துல வசதி கிடையாது.

மதிய உணவு இடைவேளையில் செந்தில்  கடிகாரத்தை கழட்டி வச்சுட்டு கை கழுவ போய்ட்டான், அந்த நேரம் பார்த்து நான் அதை எடுத்து என் கால் சட்டை பையில் போட்டுகிட்டேன்..... செந்தில் அழுதுகிட்டே உங்ககிட்ட புகார் சொன்னான்..... 

தமிழ் அறிவு கதைகள்
நீங்க அதுக்கு எந்த கோபமும் படமா... யாரையும் சந்தேக படாம.... எடுத்தவங்க கொடுத்துருன்னு சொன்னீங்க, ஆனா யாருமே கொண்டுவந்து வைக்கல...... 


கொஞ்ச நேரம் கழித்து நீங்க எல்லோரையும் வரிசையா நிற்க சொன்னீங்க... எல்லோரும் வரிசையில நின்னோம்.

எல்லாரோட கண்களையும் கட்டுனீங்க, அப்புறம் பொறுமையா ஒவொருத்தருடைய கால் சட்டைப்பையிலும் கைய விட்டு பரிசோதனை பண்ணுனீங்க,. என்னோட சட்டைப்பையில் கடிகாரம் இருந்தது... எல்லோரும் அப்போது கண்ணை கட்டிதான் இருந்தாங்க, எந்த சத்தமும் இல்லாம செந்தில்-கிட்ட போயி அந்த கடிகாரத்தை கொடுத்துடீங்க...

எங்க இருந்து எடுத்தீங்கன்னு சொல்லல, எப்படி எடுத்தீங்கன்னு சொல்லல..... .
எங்கிட்டையும் எதுவும் கேட்கவும்  இல்லை....., ஏன்டா இப்படி செய்தேன்னு என்னை எல்லோர் முன்னாடியும் அவமானமும் படுத்தவில்லை, எனக்கு திருட்டு பட்டமும் கட்டவில்லை....

என் மானத்தையும் காப்பாத்துனீங்க...! என்னோட சுய மரியாதையும் காப்பாத்துனீங்க...! அய்யா...!

அன்றைக்கு முடிவு பண்ணுனேன் அய்யா, கற்பித்தல் ஏவோல பெரிய விஷயம்ன்னு....!. அப்போது தான்  முடிவு பண்ணுனேன் அய்யா, படிச்சா ஆசிரியரா தான் படிக்கனும்-ன்னு....! கற்பித்தலை தலையாய கடமைன்னு எடுத்துக்கனும்-ன்னு  முடிவு பண்ணிட்டு உங்களை  என் முன்மாதிரி எடுத்துக்கிட்டு படிச்சேன் அய்யா. உங்கலமாதிரி நல்ல ஆசிரியரா நான் வாழ்ந்து காண்பிக்கணுன்னு ஆசை அய்யா ன்னு சொன்ன விஷ்வா கண்களில் கண்ணீர் பெருகியது, செய்தது தவறிலிருந்து பாடம் கற்பித்து கொண்ட ஆனந்தம் அதுதான்.

ஆசிரியருக்கு ரொம்ப சந்தோசம்,  அருமைடா.... அருமை ரொம்ப பெருமையை இருக்கு, நீ இன்னும் பெரிய ஆளா வருவேன்னு வாழ்த்துனாரு....

விஷ்வா ஆசிரியரிடம் கேட்டான், அய்யா இப்போதாவது சொல்லுங்க அய்யா, என்னோட முகம் உங்களுக்கு ஞாபகம் வருதான்னு..?

அப்பவும் அந்த ஆசிரியர் , இல்லையேப்பா எனக்கு ஞாபகம் வரல ன்னு - சொன்னார் 

என்ன அய்யா இப்படி சொல்லிடீங்க...!? ஏவோல பெரிய ஆபத்துல இருந்து என்னை காப்பாத்துனீங்க, அப்படியும் என் முகம் மறந்து போனதா...?

இல்லப்பா எப்படி எனக்கு ஞாபகம் வரும்ன்னு நீ நினைக்கிறே....! அன்றைய தினம் உங்களையெல்லாம் பரிசோதனை செய்யும் போது நானும் என் கண்களை  கட்டிக் கொண்டு அல்லவே பரிசோதனை செய்தேன்.....! அப்புறம் எப்படி உன் முகம் எனக்கு ஞாபகம் வரும்...?  சொல்லு.....?

ஏவோல பெரிய விஷயம் அமைதியா முடிச்சிருக்கார் பாருங்க... அவரால் அவனுக்கு திருட்டு பட்டம் கட்டியிருக்க முடியும், தண்டித்திருக்க முடியும், ஆனா அவரு எதையுமே  செய்யல....!

அந்த மாணவனையும் அடையாளம் கண்டிருக்க முடியும், அதையும்  செய்யவில்லை.

ஏவோலை பொறுமையா இந்த விஷயத்தை கையாண்டுருக்கார் பாருங்களேன்...! எங்க  அந்த மாணவனின் முகத்தை பார்த்துட்டா அந்த திருட்டு  ஞாபகம் வந்துருமோன்னு, தன் கண்களையும் கட்டிக்கொண்டு கண்டு பிடித்தார் அல்லவா..... ஒரு விஷயத்தை அவர் நாசூக்கா சொல்லுறார்.... தண்டித்தலில் இல்ல, கற்பித்தலிலும், முன்மாதிரியாக இருப்பதிலும் தான் நல்ல நிகழ்வே நடக்கும் சொல்லறார்.  



என்னா  ஒரு அமைதியா அந்த மாணவனை  ஆசிரியர் ஆக்கி இருக்கிறார் பார்த்தீர்களா..! இதே தான் நம்ம வாழ்க்கையிலும், ஒருத்தர தண்டித்தால் தான் திருந்துவாங்கன்னு நினைச்சா கண்டிப்பா மாறமாட்டாங்க, அதுக்கு பதிலா நாம முன்மாதிரியா இருந்தா.....!? நம்மல சுத்தி இருக்ககிறவங்களும் நல்லவர்களாக மாறுவார்கள்....! 

வெறுமனே ஏட்டுக் கல்வியை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பது இல்லை. கற்பித்தல், கற்பிப்பது என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விசயம். ஓர் ஆசிரியர் இதயபூர்மாகப் படிப்பித்தால்தான் அது மாணவர்களைச் சென்றடையும். உள்ளத்துடன் படிப்பித்தால்தான் மாணவர் களால் உள்வாங்க முடியும். ஆகவே கண்டித்துக் கற்பிக்கச் செய்வதெல்லாம் உரிய பலனைத் தராது என்ற உன்னத கருத்தினையும் முன்வைக்கிறார் இங்கே.

உண்மையிலேயே கற்பித்தல் என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் ஈடேற்றிவிட முடியாதுதான். மாணவர்கள் கற்றுத் தேர்ந்து வீட்டிற்கும் சமூகத்திற்கும் நற்பண்பு உள்ளவர்களாகத் திகழ்வதெல்லாம் ஆசிரியர்கள் கைகளில்தானே உள்ளது? அதை தான் அமைதியாக முடித்திருக்கிறார் அந்த ஆசிரியர்.

தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார் என்பதனை மனதில் கொள்வோம். 

இன்றைய சிறுவர்களே நாளையத் தலைவர்கள். 

இதைத்தான் ந.வீ. செயராமன் அவர்கள் தனது புதுக்கவிதையில் இவ்வாறு பாடுகிறார்.

‘ஏடுதூக்கிப் பள்ளியில்

இன்றுபயிலும் சிறுவரே

நாடுகாக்கும் தலைவராய்

நாளைவிளங்கப் போகிறார்’

எதிர்காலத்தின் தூண்களாகத் திகழும் மாணவர்களுக்குச் சீரிய சிந்தனையை விதைத்து, ஊக்க உரமிட்டு வளர்க்க இந்த ஆசிரியர்களே காரணம். 

முடிந்தவரை ஊருக்கு செல்லும் போதெல்லாம் உங்கள் ஆசிரியரை சந்தியுங்கள்....

முன்மாதிரியாய் நாமும் வாழ்ந்துதான் பார்ப்போமே  | கற்பித்தலில் களங்கமற்று கற்றுக்கொள்வோம்.


கதை : கேட்டதில் எழுதியது
படங்கள் : கூகிள்
ஆதாரம் : பாபு நடேசன் | படித்ததில் பிடித்தது

12 comments:

  1. சிறப்பான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
  2. எனக்கும் ஒரு அனுபவம் இருக்கிறது. எனக்கு சொல்லி கொடுத்த வாத்தியார்.. என்னை எருமை மாடு மேய்க்கச் சொன்னார். அன்று என் அம்மா எருமை மேய்க்க விடாமல் மேல்நிலை வரை என்னை படிக்க வைத்துவிட்டார்..

    ReplyDelete
  3. // அருமை... ரொம்ப பெருமையா இருக்கு //

    ஆம்... உண்மை...

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு. நானும் ஆசிரியராக இருந்திருக்கிறேன். உங்கள் பதிவு மனதுக்குள் மகிழ்ச்சி யைத் தந்தது

    ReplyDelete
  5. Excellent story .. but this is not story and real history .. read before I am confused but read after I am happy.. thank you

    ReplyDelete
  6. Tamil mozhiyin valimaiyai parungal https://www.vasagam.com/karpanaiyin-ucham

    ReplyDelete
  7. ஆஹா, அருமை. நான் உங்கள் கதைகளை சொல்வதற்கு அனுமதிக்க வேண்டும். நல்லா கருத்துக்களை கூறவேண்டும். Please permit me to use your stories to narrate.

    ReplyDelete
  8. அருமையான கதை! சிறப்பு.

    ReplyDelete
  9. வலைதமிழ் நடத்தும் கதை மற்றும் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு 1000 ரூபாய் வரை வெல்லுங்கள். https://valaithamil.com
    இனி தமிழில் டைப் செய்வது மிகவும் எளிது https://valaithamil.com/phonetic.html

    ReplyDelete