RSS

எல்லா உயிர்களுக்கும் உதவி செய் | தமிழ் அறிவு கதைகள்

ஒரு நாட்டு  ராஜாவிடம் முத்தன்  வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன்  தான் அந்த ராஜாவுக்கு தினமும்  உணவு கொண்டு கொடுப்பான்.  ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள். 

ஒரு நாள்  முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள்  ஏதோ  துண்டு தூண்களாக  சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று  ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய  சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான். 
அவன் குதிரையில்  கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள்  சாரை சாரையாக போவதை பார்த்தான்,  எறும்பின்  தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு  உதவுவேன் என்று கூறியது.


அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன.

அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.


அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின.

அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. 

அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான்.

போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால்   சிறையில் தள்ளிவிடுவார்கள்.  

போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை  எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான்.

குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன்.

இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு   விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க  வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான்  என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான்.

இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும்.

அவன்  இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான்  அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான்.

எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். 

‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’ 

மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது.

அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை
தமிழாக்கம்: ஆல்பர்ட்
” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது.

குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.


தொகுப்பும் மீள்பதிவும்: பாபு நடேசன்

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

காகமும் கார்த்தியும் | நேரம் தவறாமை | தமிழ் அறிவு கதைகள்

சுடரொளி ஒரு பள்ளி  பருவ மாணவன் ஒரு நாள் கா... கா.... என்று கத்திக்கொண்டு ஒருக் காகம் பறந்து வந்தது அவன் வீட்டின் அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஆசை,  பிடிக்க ஓடினான். உடனே அது பறந்து சென்றது. சுடரொளி திரும்பி வந்து காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து அங்கும் இங்கும் நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.

காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.

மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.

ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.நேரத்தை தவறவிடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

எலியும் தாத்தாவும் | அளவான ஆசை - ஜப்பானிய சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் வசித்து வந்தாங்க. தினமும் காட்டில் உள்ள மரங்களை வெட்டி, விறகாக்கி அதை பக்கத்து கிராமத்தில விற்று பிழைப்பை நடத்தி வந்தார்கள். ஒரு நாள் மதியம் தாத்தா ரொம்ப களைச்சு போய் சாப்பிட உட்காந்தார்.பாட்டி அவருக்கு கேழ்வரகு களி சமைத்து அனுப்பி இருந்தாங்க. களியை கையில எடுத்தது சாப்பிட போனார், அது தவறி கீழ விழுந்து, அது ஒரு பொந்துக்குள்ள போய் விழுந்துடுச்சி. அது ஒரு எலி பொந்து போல இருந்தது . அய்யோ இனி சாப்பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு யோசிச்சார். நல்ல பசி வேற. அப்படியே உட்கர்ந்து இருந்தார், திடீர்னு ஒரு அழகான எலி பொந்திலிருந்து எட்டி பார்த்து.. ”சாப்பாடு போட்டமைக்கு மிக்க நன்றி தாத்தா” ன்னு சொல்லுச்சு.

அட! எலி பேசுதேன்னு ஆச்சரியமா பாத்தார். ”நல்லா சாப்பிடுங்க எலி ன்னு தாத்தா சொல்லிட்டு, நீ பார்க்க ரொம்ப அழகா இருக்கே ன்னும் சொன்னாரு. எலி சிரிச்சிகிட்டே....! ”நீங்க எங்க அரண்மனைக்கு வரீங்களா?” ன்னு கேட்டுச்சாம்.

தாத்தா சிரிச்சுக்கிட்டே “இந்த சின்ன பொந்துக்குள்ள...? நானா...!? நான் எப்படி வர முடியும்”ன்னு தாத்தா கீழே உக்கார்ந்து கேட்டார் தாத்தா. முடியாதது எதுவும் இல்ல தாத்தா, அது ரொம்ப சுலபம்..!. நீங்க “என் வாலை பிடிச்சிக்கிட்டு கண்ணை மூடிக்கோங்க”ன்னு சொல்லிச்சு. தாத்தாவும் சிரிச்சுக்கிட்டே கண்ணை மூடிக்கிட்டு எலி வாலை பிடிச்சுக்கிட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம். எங்கயோ பறக்கற மாதிரி இருந்துச்சு. கொஞ்ச நேரம் கழித்து “தாத்தா வாங்க வாங்க” அன்பான வரவேற்பு சத்தம் கேட்டு கண்ணைத் திறந்தார் தாத்தா.
எலிகளோட அரண்மனை ரொம்ப பிரமாண்டமாய் இருந்தது. அங்கே நிறைய தங்கங்கள் குவித்து கிடந்தன. சில எலிகள் சமைத்துக்கொண்டு இருந்தன. சில எலிகள் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தன, சில எலிகள் சாப்பாட்டு பொருள்களை எங்கிருந்தோ எடுத்து கொண்டு வந்தன. எங்க பாத்தாலும் தங்கமா இருந்துச்சு. அப்போ பெண் எலி வந்து “தாத்தா உங்களுக்கு பசிக்கும், இந்தாங்க சாப்பாடு” ன்னு சாப்பாடு கொடுத்தது. எலிகள் எல்லாம் பாட்டு பாடிட்டு மகிழ்ச்சியா ஆடி பாடி மகிழ்ந்து கொண்டிருந்தது.“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

இதுதான் அந்த பாட்டு,
தாத்தா அந்த பாட்டு கேட்டுகிட்டே சந்தோஷமா சாப்பிட்டு முடித்தார். ராஜா எலி ஒன்னு தாத்தாவை நோக்கி ஒரு மூட்டை இழுத்து வந்தது. தாத்தாவிடம் வந்து இது எல்லாம் உங்களுக்கு தான், நீங்க எடுத்துட்டு போங்க ன்னு சொல்லுச்சாம். தாத்தா மூட்டையை திறந்து பார்த்தார்...! ஒரே ஆச்சரியம், மூட்டை நிறைய தங்கம். எலிகள் தாத்தாவுக்கு  டாட்டா சொல்லி மறுபடியும் அதே எலி வாலை புடிச்சிக்கிட்டு,கண்ணை மூடிகிட்டு பறந்து அவர் வீட்டுக்கு வந்துட்டார்.வீட்டுக்கு வந்த தாத்தா, அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பாட்டிகிட்ட சுவராஷ்யமா சொல்லிக்கிட்டு இருந்தாரு. தங்கத்தை எல்லாம் காண்பிச்சாரு. பக்கத்து வீட்டில இருந்த ஒருத்தன் இதை எல்லாம் ஒட்டு கேட்டுகிட்டு இருந்தான்.

மறுநாள் பக்கத்து வீட்டுக்காரன் அதே பொந்திற்கு போய் ஒரு களி உருண்டைய போட்டான்.அதே எலி வந்துச்சு, அதே போலவே அவனை அவங்க அரண்மனைக்கு கூட்டிட்டு போச்சு.

“நாங்கள் இங்கே எலிகள்
நல்ல நல்ல எலிகள்
பூனை சத்தம் வேண்டாமே
எங்கும் அமைதி வேண்டுமே
திலக்கலக்கா திலக்கலக்கா”

எலிகள் பாடும் சத்தம். அரண்மனையில எங்க பாத்தாலும் தங்கமா இருந்தாது. இவனுக்கு பேராசை. ஒரு மூட்டை தங்கம் மட்டும் பத்தாது, இதை எல்லாம் எடுத்துக்கலாம்ன்னு திட்டம் போட்டு யோசிச்சான். பெண் எலி இவனுக்கு சாப்பாடு எடுத்து வரும் போது “மியாவ் மியாவ்” என சத்தம் போட்டான். எல்லா எலியும் பயந்து எங்க போச்சுன்னே தெரியல. கொஞ்ச நேரத்தில ஒரு எலியும் அரண்மனையில் இல்ல. எல்லா தங்கத்தையும் அள்ளி எடுத்தான். ஆனா அங்கிருந்து எப்படி வெளிய போறாதுன்னு தெரியல. ஒரே இருட்டா மாறிடுச்சு. கத்தி அழுது பாத்தான். ஒருத்தரும் வரல. எலிகள் அந்த இடத்திலிருந்து இடம் மாறி போய் வேற இடத்துல அரண்மனையை கட்டி சந்தோசமா வாழ்த்துச்சாம்.


பேராசை இல்லாத தாத்தா நன்கு பிழைத்து வந்தார்.

பேராசை கொண்ட பக்கத்து வீட்டுக்காரன் இன்னும் எங்கிருக்கண்ணே தெரியல.

அளவான ஆசையுடன் இருப்பது யாருக்கும் துன்பம் இல்லை

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

வலைபதிவர் திருவிழா 2015 நன்றி மற்றும் பாராட்டு பதிவு | தமிழ் அறிவு கதைகள்

மின்னூல் வடிவில் காண இங்கே சொடுக்கவும்
https://drive.google.com/open?id=0B9JYBBmIY3qbSDlFcmx2eEllZkE
வலைபதிவர் திருவிழா 2015. நன்றி மற்றும் பாராட்டுப் பதிவு


எல்லோருக்கும் வணக்கம்


வலைபதிவர் திருவிழா மிகச் சிறப்பாக, நினைக்க முடியாத அளவுக்கு, கற்பனைக்கு எட்டாத அளவில், தன் வீட்டு விழாவைக்கூட இப்படி நடத்தி இருக்க முடியாத அளவுக்கு வெகு சிறப்பான ஏற்பாடுகளை ஐயா நா. முத்துநிலவன் முன்னிலையில் விழா குழு அமைத்து எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து, அடுத்த நிகழ்வு எப்போது வரும் என ஏங்க வைத்துவிட்டார்கள். வரவேற்ப்பில் இருந்து, நிகழ்வின் முடிவின் வரை எல்லாம் மிக மிக சிறப்பு.
ஆன்றோர்கள், சான்றோர்கள், இளைஞகர்கள் எல்லோரும் தங்களது அனுபவங்களை கருத்துகளை எல்லோருக்கும் வாரி வழங்கிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
காலை உணவு முதல் கவனிப்போ கவனிப்பு...! சூடான சூப் வேணுமா?...! அது உங்களை தேடி வருகிறது, இருக்கையிலேயே இருங்கள் என அன்பான உபசரிப்புகள். சூப் கீழே கொட்டி விடுவார்கள் என் தெரிந்தும் அதை துடைப்பதற்கு கூட ஒரு குழு அமைத்து மிக மிக சிறப்பாக நடத்திவிட்டார்கள். அவர்களை பாராட்ட எனக்கு வயதில்லை என்றாலும் கூட அவர்களின் உபசரிப்புக்கு ஒரு மிக பெரிய, பெருமையான வணக்கம்.
அவையில் சிறப்பு விருந்தினர்களாக அழகப்பா பல்கலைகழக துணை வேந்தர் திரு எஸ் சுப்பையா அவர்கள், விக்கிபீடியா இந்திய ஒருகினைப்பாளர் திரு ரவிசங்கர் அவர்கள், தமிழ் இணைய கல்வி கழக உதவி இயக்குனர் தமிழ்பரிதி அவர்கள், கணினி தமிழ் சங்க நிறுவனர் திரு அருள்முருகன் அவர்கள் மற்றும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவின் இடையிடையே முத்தமிழ் பாடல்கள், சினிமா கலவாத தமிழ் பாடல்கள் என சங்கீதத்திலும் மூழ்கடித்துவிட்டார்கள்.
C:\Users\bgh29817\AppData\Local\Microsoft\Windows\Temporary Internet Files\Content.Word\P_20151011_103026.jpg
முதியோர்கள் எல்லோரும் நாங்கள் எப்படி வலைதளத்திற்கு வந்தோம், எப்படி புகழ் பெற்றோம் என்கின்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொன்றார்கள்.
விழாவில் ஐயா திண்டுகள் தனபாலன் அவர்களுக்கு "வலை சித்தர்" என்கின்ற பட்டமும் வழங்கப்பெற்றது. இன்று முதல் ஐயா DD அவர்களை "வலை சித்தர்" என அன்போடு அழைப்போமாக...!
சென்னை வலைபதிவர் சார்பாக ஐயா (பெயர் ஞாபகம் வரவில்லை) அவர்களை விழாவில் சிறபித்த போது ஒரு விஷயத்தை சொன்னார், அவையில் ஒரே சிரிப்பு மழை.
முதன்முதலில் வலைபதிவர் சந்திப்புக்கு அனுமதி வாங்க காவல் நிலையம் சென்றபோது அங்கு காவலர்கள் "நீங்க எந்த மீனவ குப்பத்தை சேர்ந்த வலை செய்கிறவர்கள் என கேட்டுள்ளார்கள் " அரங்கத்தில் சிரிப்பலை...! பின் அவர்கள் ஒருவழியாக அந்த வலை இல்லை, இது இணைய வலை எனக்கூறி அனுமதி வாங்கி நடத்தி இருக்கிறார்கள்.


விழாவினை நேரலையில் காண சிறப்பு ஏற்பாடுகளை DD என்கின்ற "வலை சித்தர்" U K Info Tech மற்றும் "விதை KALAAM " குழுவினர் ஏற்படுத்தி இருந்தார்கள்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் , சிறப்பாக பணியாற்றிய நடுவண் குழுவுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டர்கள்.
இடையிடையே வலைபதிவர்கள் அறிமுகங்களும் நடைபெற்றது.
மதிய உணவு பரிமாறல் பொண்ணு வீட்டுல, மாப்ள வீட்டுல கூட இப்படி பரிமாறியது கிடையாது, அப்படி ஒரு கவனிப்பு, ஐயா என்ன வேணும்…!, இன்னும் வேணுமா….!? ன்னு பாசத்தை பொழிந்துவிட்டார்கள் இன்றைக்கெல்லாம் உறவினர் வீட்டு நிகழ்வுகளுக்கு சென்றால் யாரு பரிமாறுகிறார்கள் என்று தெரியாது, ஆனால் இங்கோ விழா குழுவினரே எல்லாம் செய்து முடித்திருகின்றனர்.
மதிய உணவு முடிந்ததும் முக்கனிகளை கொடுத்து திக்கு முக்காட வைத்தார்கள், தமிழ் விழாவில் தமிழ் கனிகளை கொடுத்து விழா குழுவினர் நம்மை நெகிழ்ச்சி பெற வைத்துவிட்டார்கள்.


மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு புத்தக வெளீயீட்டு விழா நடைபெற்றது, திரு ஐயா கரந்தை ஜெயராம் அவர்களின் புத்தக வெளியீடு.
மலேசியா தவரூபன் அவர்களின் நூல் வெளியீடு.
மாலையில் குழி பணியாரம் (இனிப்பு/காரம்) கொடுத்து இன்னும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு போய்விட்டார்கள்.
பதிவு செய்த அனைவருக்கும் ஒரு வலைபதிவு கையேடும் ஒரு புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் | மென்மேலும் வளர்க.
உங்களுடன்
பாபு நடேசன் 
தமிழ் அறிவு கதைகள்
+91 9087499621
tamilarivukadhaikal@gmail.com

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்